பிக்பாஸ் பிரதீப் குறித்து போஸ்ட் போட்ட கவின்! என்ன சொன்னார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7, கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதில், வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக உள்நுழைந்தவர், பிரதீப் ஆண்டனி.
பிரதீப் மீது ஆரம்பத்தில் இருந்தே பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இருப்பினும் மக்களின் ஆதரவால் அவர் 5 வாரங்களுக்கும் மேலாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்தார்.
பிரதீப் ஆண்டனிக்கு நேற்றைய எபிசோடில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த முடிவு சிலருக்கு ஆறுதலாகவும் பலருக்கு அதிருப்தியாகவும் உள்ளது.
பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக இருந்தவர், கவின். இவரும் பிரதீப் ஆண்டனியும் நெருங்கிய நண்பர்கள்.
பிரதீப் மற்றும் கவின் ஆகியோர் ஒன்றிணைந்து, சில படங்களில் பணியாற்றியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘டாடா’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர்.
பிரதீப், “பெண்களை பாதுகாப்பின்மையுடன் உணர வைக்கிறார்..” என்ற காரணத்திற்காக ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது நண்பர் கவின், அவருக்கு ஆதரவாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
“உன்னை பற்றி தெரிந்தவர்களுக்கு எப்போதும் நீ யார் என்பது தெரியும்” என்ற வாக்கியத்துடன் இந்த பதிவினை கவின் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த கவின் ரசிகர்கள், பிரதீப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். #PradeepAntony என்ற ஹேஷ்டேக் நேற்று இரவில் இருந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.