கன்னியில் 18 ஆண்டுக்கு பிறகு சூரியன் கேது சேர்க்கை! குடும்பத்தில் கலகம் உண்டாக்கும் இணைவு
தைரியம், தன்னம்பிக்கை மற்றும் வலிமைக்கு காரணமாக இருப்பவர் சூரிய பகவான். பித்ரு காரகனான சூரியனை அடிப்படையாகக் கொண்டே பிற கிரகங்கள் இயங்குகின்றன.
ஆன்மீகத்திற்கு காரணமான ஞானக்காரகர் கேது, ஒருவருக்கு வாழ்க்கையில் மனப்பக்குவத்தைக் கொடுப்பார். சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கிரஹன் தோசத்தை உருவாக்கும்
நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது கிரகங்களில் ராகு ஆசையை கொடுத்துக் கெடுப்பார் என்றால், கேது கெடுத்து பிறகு கொடுப்பார்
ராகுவும் கேதுவும் எப்போதும் இணைந்தே பார்க்கப்பட்டாலும், இரண்டுமே நிழல் கிரகங்கள் என்றாலும், இரண்டும் முற்றிலும் எதிர் எதிரான கிரகங்கள் ஆகும்
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சிக்கு பிறகு, சூரியனும் கேதுவும் இணைவதால் பாதிக்கப்படும் ராசிகளில் முதன்மையானது கடக ராசி. நிலுவையில் உள்ள பணிகளை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். கடன் தொல்லை பாடாய் படுத்தும். முன்னேற்றத்திற்கான பாதை எங்கேனும் தெரியாதா என்று தவிக்கும் நிலை உருவாகும்.
சூரியனுடன் கேது இணைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நஷ்டம் ஏற்படும். விபத்து செய்தி ஒன்று வந்து மனதை உலுக்கும். பணம் தண்ணீராய் செலவாகும். மனதில் கவலைகள் அதிகரிக்கும்
கன்னியில் கேதுவுடன் சூரியன் இணைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு மனதில் கவலை உருவாகும். கவலைகளைக் கொடுக்கும் இந்த இணைவு, சூரியன் அடுத்த ராசிக்கு பெயர்ச்சியானதும் குறைந்துவிடும். எனவே ஒரு மாதம் தான் பிரச்சனை...
கும்ப ராசியினரின் மனதில் சஞ்சலங்களைத் தோற்றுவிக்கும் இந்த இணைவு, கவலைகளையும் வருத்தங்களையும் கொடுக்கும். மனதில் உறுதியுடன் இருந்தால், இன்று வருத்தமாக இருப்பது நாளை நல்லதாக மாறும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது