18 ஆண்டுக்குப் பிறகு சூரியன் கேது அபூர்வ சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு மூச்சு முட்ட அதிர்ஷ்டம்

Fri, 02 Aug 2024-9:38 am,

சூரியன்-கேது சேர்க்கை சில ராசிகளுக்கு நன்மை பயக்கும். சூரியன், கேது சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என பார்க்கலாம்.

16 செப்டம்பர் 2024 முதல், கிரகங்களின் அரசனான சூரியன், கன்னி ராசியில் பெயர்ச்சி அடைவார், பின்னார் 1 மாத காலம் இந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தின் படி, கிரகண யோகமானது சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஆகும் இடத்தில் அமையும்.

 

ரிஷபம்: ரிஷப ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கல்வித்துறையில் நல்ல பலன்களைத் தரும். உயர்கல்வியில் வெற்றி பெறலாம். மேலும், வெளிநாட்டில் படிக்க செல்லலாம். ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுபவர்கள்.

சிம்மம்: சிம்ம ராசியின் இரண்டாம் வீட்டில் சூரியன் கேது சேர்க்கை அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், செல்வாக்கு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துகளை பெறலாம். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

 

விருச்சிகம்: விருச்சிக ராசியின் 11ம் வீட்டில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடக்கப் போவதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். மனம் திருப்தியுடன் இருக்கும். மூத்த சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும்.

 

தனுசு: சூரியன் மற்றும் கேது சேர்க்கை 10 ஆம் வீட்டில் நடக்கப் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு கிடைக்கும். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பிரபலம்அடைவீர்கள். தொழில் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

 

மகரம்: மகர ராசியின் 9ம் வீட்டில் சூரியன் மற்றும் கேது சேர்க்கை நடக்க இருப்பதால், மகர ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆவர்வம் அதிகரிக்கும். மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் புனித யாத்திரைக்கு செல்லலாம். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் தொழில் வளர்ச்சி அடையும்.

 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link