கேது பெயர்ச்சி: அடுத்த 8 மாதத்திற்கு 12 ராசிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? யார் யாருக்கு பிரச்னை?
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் ஊடக அறிக்கைகள், நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: கேது பகவான் ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு மாற்றமடைவதன் மூலம், மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் பணியிடத்தில் கடுமையான சிரமத்தை சந்திப்பார்கள். இது மன நிம்மதியை கெடுக்கலாம். தசைகள் மற்றும் எலும்புகள் சார்ந்த உடல்நலப் பிரச்னைகள் வரலாம், எனவே ஜாக்கிரதையாக இருக்கவும். கடின உழைப்பை கொடுத்தாலும் மிகவும் பொறுமையாக இருந்து தொடர்ந்து முயற்சி செய்யவும். பழைய பிரச்னைகள் மீண்டும் எட்டிப்பார்க்கலாம், ஆனால் அதற்கான விடையும் கிடைத்துவிடும். பிறரிடம் வாக்குவாதம் செய்வதை தவிருங்கள், அது உங்களை அவரிடம் இருந்து விலகிவிட வழிவகுக்கலாம். மன நிம்மதிக்கு பிறக்கு தானம் செய்யுங்கள்.
ரிஷபம்: கேது பகவானின் இந்த பெயர்ச்சியால் குழந்தை சார்ந்த பிரச்னைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீங்கும் எனலாம். இந்த நேரத்தில் உங்கள் புதிய இடத்தில் பணியும் கிடைக்கலாம், அங்கிருந்து நீங்கள் புதிது புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். நேர்மையாக ஒழுக்கமாக இருப்பது அவசியம். உங்களுக்கு வயிறு சார்ந்து அதாவது செரிமானம், வாயு தொல்லை, அசிடிட்டி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மிதுனம்: கேது பகவானின் இந்த பெயர்ச்சி மூலம், நீங்கள் சொத்துகள், வாகனங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்குவீர்கள். வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் உங்கள் மன நிம்மதிக்காக ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அதுவும் அடுத்தாண்டு மே, ஜூன் மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த வேலைக்கு அப்படியே எதிரான வேலை கிடைக்கலாம். இது உங்களுக்கு மன உளச்சலை ஏற்படுத்தலாம். உங்களின் தாயார் உடல்நலத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். திருமண உறவில் பார்த்து பக்குவமாக பேசுங்கள். வார்த்தைகளை அளவில்லாமல் கொட்டிவிட்டால் பெரிய பிரச்னை ஆகலாம்.
கடகம்: கேது பகவானின் இந்த பெயர்ச்சியால் உங்களின் ஈகோ அதிகரிக்கும். இதனால் உங்களின் பணியிடத்திலும், காதல் வாழ்க்கையிலும் பிரச்னை வரலாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். உடன்பிறப்புகளுடனும் நல்லுறவை பின்பற்றுங்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஆப்பு வைப்பவர்கள் யார், தவறாக வழிநடத்துபவர்கள் யார், உங்களின் வளர்ச்சியில் பொறமைப்படுபவர்கள் யார், உங்களின் நலவிரும்பிகள் யார் யார் என்பதை தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியமாகும்.
சிம்மம்: கேது பகவானின் இந்த பெயர்ச்சி காலம்தான் உங்களுக்கு புது வீடு அல்லது சொத்துகளை வாங்க உகுந்த காலகட்டமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழிலில் இருந்தால் பெரிய லாபம் காத்திருக்கிறது. குடும்பத்தில் சொத்து விவகாரம் தொடர்பாக பிரச்னை வரலாம், இதனால் நீங்கள் சிலரை இழக்க நேரிடலாம். உங்களின் பல் ஆரோக்கியத்திலும் சிரத்தையாக இருக்கவும்.
கன்னி: இந்த ராசிக்காரர்களின் இயல்பில் மாற்றம் ஏற்படலாம். திடீரென கோபம் உச்சிக்கு ஏறலாம். உடனே சாந்த அடைந்தும்விடுவீர்கள். இது ஒரு பழக்கமாக மாறலாம். அடிவயிறு சார்ந்த நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. வருவாய் அதிகரிக்கும். யோகா மற்றும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல காலம் காத்திருக்கிறது. உங்களின் தவறான முடிவால் பொருளாதார பிரச்னைகள் வரலாம், எனவே ஜாக்கிரதையாக முடிவெடுங்கள்.
துலாம்: இந்த ராசிக்காரர்களில் மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல பலன்கள் இருக்கின்றன. ஆன்மீகம் நோக்கிய ஆர்வம் உங்களிடம் அதிகரிக்கும். பயணம் செல்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். வருவாயை விட செலவு அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிட்டும். அடுத்தாண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் வருவாயில் பிரச்னை வரும். படிக்கும் மாணவர்களுக்கும் சில பிரச்னைகள் வரலாம்.
விருச்சிகம்: வருவாயில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் நீங்கும். மூத்தவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும், ஆனால் நீங்களாக சென்று உதவிக்கேட்டால் மட்டுமே கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும், பங்குச்சந்தையில் தெளிவாக நிதானமாக முதலீடு செய்தால் லாபம் கிடைக்கலாம். உணர்ச்சிவசப்படாதீர்கள்.
தனுசு: இந்த காலகட்டத்தில் உங்களின் வேலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்களுக்கு உதவி தேவைப்படும்பட்சத்தில் மூத்தவர்களிடம் கேளுங்கள், நன்மை கிடைக்கும். வேலையில் கவனமாக இருங்கள், வாக்குவாதத்தை தவிர்த்துவிடுங்கள். புதுவிதத்தில் வேலை செய்து வெற்றியை ருசி பாருங்கள். சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது அதிகமாகும், எனவே உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
மகரம்: இந்த காலகட்டத்தில் வீட்டில் பல்வேறு பூஜைகளை மேற்கொள்வீர்கள் மற்றும் ஆன்மீக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சொத்து சார்ந்த பணபரிமாற்றத்தில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். திடீரென ஒரு பிரச்னை ஏற்பட்டு அதிக செலவுக்கு இட்டுச்செல்லும். வாகனங்களை இயக்கும்போது கவனமாக செல்லவும். இஷ்ட தெய்வங்களை அடிக்கடி வணங்கினால் பிரச்னைகள் தீரும்.
கும்பம்: இந்த காலகட்டத்தில் நீங்கள் ஈகோவை தவிர்க்க வேண்டும். தவிர்த்தால் பிரச்னையையும் தவிர்க்கலாம். உடல்நலனில் பிரச்னை வரலாம், மருத்துவரின் ஆலோசனையை முறையாக பின்பற்றவும். பொருளாதாரம் சார்ந்தும் பிரச்னை வரலாம். உங்களுக்கு வர வேண்டிய பணம் வருவதிலும் சிக்கல் வரும், தேவையற்ற செலவுகளும் வரும். எனவே அநாவசியமாக பணத்தை கடன் கொடுக்க வேண்டாம். குழந்தைகள் சார்ந்தும் பிரச்னை வரலாம்.
மீனம்: இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் நிலைத்தன்மை இருக்காது. வணிகத்தில் நீங்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும். மூத்தவர்களின் அறிவுரைகளை பின்பற்றவும். மனைவியின் உடல்நலனையும் கவனியுங்கள். திருமண வாழ்வில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். வெளிநாட்டில் நிரந்தரமாக செட்டில் ஆகும் வாய்ப்புகளும் வரும்.