Viral Pic: ரவிவர்மாவின் ஓவியங்களாய் மாறிய பிரபல நடிகைகள்..!

Tue, 04 Feb 2020-2:35 pm,

பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை அவர் எடுத்துள்ளார். 

இந்த அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 

பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் 2020 நாட்காட்டிக்காக இந்த புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார்.

ஓவியங்களில் உள்ள முகத் தோற்றத்திற்குப் பொருத்தமான நடிகைகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். 

சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸி பிரியதர்ஷன், லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா, நதியா ஆகியோர் ஓவிய புகைப்படங்களில் மிக அழகாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்கள். 

ஆடை, அணிகலன், அலங்காரம், பாவனை என அனைத்தும் அப்படியே அந்த ஓவியங்களை அச்செடுத்தது போன்ற தோற்றத்தில் பிரபல முன்னணி நடிகைகளை வைத்து அவர் படம் பிடித்திருக்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link