தூக்கத்திலேயே இறந்து போக காரணம் என்ன? இரவில் வரும் சைலண்ட் ஹார்ட் அட்டாக்
இதய செயலிழப்பு என்பது, இன்றைய கால கட்டத்தில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கிறது இது ஒரு முறை ஏற்பட்டால், அதன்பிறகு தொடர்ந்து அபாயம் அதிகரிக்கிறது. இதய செயலிப்பு, இறப்புகளுக்கு முக்கியமான காரணமாகிறது.
ஹார்ட் பிளாக் ஏவி பிளாக் (Heart block - AV block) அழைக்கப்படுகிறது, இது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மின் சமிக்ஞை பகுதி முழுமையாகத் தடுக்கப்படும் போது இதயத்தை மெதுவாக்கும் அல்லது இதயத்துடிப்பை நிறுத்தும் செயலாகும். இதயம் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய முடியாத போது ஏற்படும் ஒரு நிலை ஆகும்.
இதயம் செயல்படுவது குறையும்போது, மயக்கம், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை தோன்றும்
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் நம் உடலில் தோன்றத் தொடங்குகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாரடைப்புக்கான அறிகுறிகள் வேறுபடலாம்.
இதய செயலிழப்பு அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும், இரவில் தோன்றும் இதய செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகள் சில உள்ளன. அவற்றில் பொதுவானது சோர்வு மயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
கால்கள், கணுக்கால், வயிறு ஆகியவற்றில் வீக்கம் காணப்படுவது இதய செயலிழப்புக்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்
இயல்பான இதயத் துடிப்பு என்பது, இதயத்தின் வென்ட்ரிக்கிள்கள் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுருங்கி ஓய்வெடுக்கின்றன என்பதை குறிக்கிறாது. பெரியவர்களிடையே சாதாரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கிறது
இருமல் அதிலும் இடைவிடாத இருமல் என்பது இதய பிரச்சனையின் அறிகுறி அல்ல. ஆனால் இதய நோய் இருந்தால் தொடர்ந்து இருமுவதும், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு சளி இருமலுடன் சேர்ந்து இருந்தால், அது இதய செயலிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
மாரடைப்பு ஆபத்து பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், பெண்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிவிடுவார்களாம், ஆண்கள், அனைத்தையும் பேசாமல் மனதில் வைத்துக் கொள்வதால் ஏற்படும் மன அழுத்தம் இதயம் செயலிழந்து போவதற்கான அறிகுறி என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)