இன்னும் 12 நாட்களில் சனி வக்ர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு லாபம், 3 ராசிகளுக்கு நஷ்டம்
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் செல்வம் உயரும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
ரிஷப ராசி: வக்ர சனியின் காரணமாக உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை தரும். இந்த நேரத்தில், விரும்பிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பொழிவார், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட பணிகள் முடிவடையும்.
கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி கடினமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
சிம்ம ராசி: இந்த நேரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. தடைபட்ட உங்களது பணிகளும் எளிதாக நிறைவேறும்.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் மன உளைச்சலை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். கடன் வாங்குவதை தவிக்கவும்.
மகர ராசி: பேச்சில் நிதானம் தேவை. கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலைப்படலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம்.
கும்ப ராசி: உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வாழ்கையில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும்.