குரு-சந்திரன் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை
மேஷ ராசி: குரு சந்திரனின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு குழந்தை தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். உங்கள் புரிதலின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும். பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும்.
மிதுன ராசி: வியாழன் மற்றும் சந்திரனுடன் சேர்ந்து உருவாகும் யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். பண வரவு அதிகமாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கும் நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
துலாம் ராசி: குரு மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் மரியாதை பெறுவார்கள். சம்பள உயர்வு இருக்கும். கடினமாக உழைப்பவர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கஜகேசரி யோகம்: மே 17ஆம் தேதி வியாழன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைவதால் கஜகேசரி யோகம் ஏற்பட்டது. மேஷ ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
மேஷ 2023 ராசியில் குரு சந்திரன் சேர்க்கை: மேஷ ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவானது. இதனால் குரு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம், மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த பலன் அடைவார்கள். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.