தெரு வியாபாரிகளுக்கு மத்திய அரசும், அரசு வங்கியும் வழங்கும் அசத்தல் கடன் திட்டம்..!!

Sat, 17 Oct 2020-3:50 pm,

மத்திய அரசின் ஸ்வநிதி திட்டத்தில் வங்கி இணைவது, எங்களுக்கு ஒரு பெரிய கவுரவம் என்று இந்திய வங்கி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) பத்மஜா சுண்டுரு தெரிவித்தார். இது அரசாங்கத்தின் தற்சார்பு (Atmanirbhar bharat) இந்தியாவை நோக்கிய ஒரு மிக பெரிய திட்டமாகும்.

தெரு விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கடன்களை வழங்குவதற்காக பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி ( Svanidhi) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு DBT மூலம் கடன் வழங்க இந்தியன் வங்கி ஒருங்கிணைந்த ஆன்லைன் போர்டல் ஒன்றைஉருவாக்கியுள்ளது. இந்த வங்கி தீனதாயாள் அந்த்யோதயா யோஜனாவுக்கான டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை வங்கி வெற்றிகரமாக முடித்துள்ளது.

 பிரதமர் ஸ்வானிதி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) போர்ட்டலை ஒரு செயலி மூலம் இயக்கும்  அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இண்டர்பேஸ் என்னும் அமைப்புதொடக்கி வைக்கப்பட்டுள்ளது

பிரதமர் ஸ்வானிதி போர்ட்டலுக்கும் எஸ்பிஐயின் இ-முத்ரா போர்ட்டலுக்கும் இடையிலான இந்த இணைப்பின் மூலம் விண்ணப்பிப்பது மிகவும் எளிது. அதோடு, கடனைப் பெறுவதற்கான செயல்முறையும் மிக எளிது. தெருவோர வியாபாரிகள், மிக எளிதாக கடன் பெறலாம்.  

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமர் ஸ்வானிதி திட்டத்தை 2020 ஜூன் 1 முதல் அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 50 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும்.

 

இந்த திட்டத்தின் கீழ், விற்பனையாளர்கள் ரூ .10,000 வரை மூலதன கடன் பெறலாம், அதை அவர்கள் 1 வருடத்தில் மாத தவணை மூலம் திருப்பிச் செலுத்த வேண்டும். அக்டோபர் 6 ஆம் தேதி நிலவரப்படி, பிரதமர் ஸ்வானிதி திட்டத்தின் கீழ் 20.50 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அவற்றில் 7.85 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்  2.40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link