கொரோனா தடுப்பூசி பதிவிற்கான வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா இல்லையா என்பது ஒரு நபரின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. இது கட்டாயமாக்கப்படாது. தடுப்பூசி போடக்கொள்ள விரும்புவோர், முதலில் பதிவு செய்ய வேண்டும்.
அமைச்சகம் வழங்கிய நடைமுறையின்படி, தடுப்பூசிக்கான பதிவை ஆன்லைனில் செய்யலாம். அதன் பிறகு, தடுப்பூசி எந்த நேரத்தில் கொடுக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் தொலைபேசியில் வழங்கப்படும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற ஆன்லைன் பதிவு அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யும் போது மொபைல் எண்ணும் கோரப்படும். தடுப்பூசி போடுவதற்கான தேதி இந்த மொபைல் எண்ணில் வழங்கப்படும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள அடையாள அட்டையும் தேவைப்படும். இதில், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புக், மாநிலம் அல்லது மத்திய அரசு வழங்கும் எந்த அடையாள அட்டையும் செல்லுபடியாகும்.
பல கொரோனா தடுப்பூசிகளின் சோதனைகள் கடைசி கட்டத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது. தடுப்பூசி கான அனுமதி கிடைத்தவுடன், அரசாங்கம் தடுப்பூசி போடும் பணியை தொடங்கும். இந்தியாவில் கிடைக்கும் தடுப்பூசிகள் மற்ற நாடுகளில் உருவாக்கப்படும் தடுப்பூசிகளைப் போலவே மிகவும் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த காலங்களில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழு அளவில் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.