ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!

Sat, 04 Sep 2021-2:04 pm,

முல்லா அப்துல் கானி பராதர் ஒருகாலத்தில் தாலிபானின் தனித்தலைவர் முல்லா முகமது உமரின் நெருங்கிய நண்பராக இருந்தார், அப்போது அவர் அவருக்கு "பராதர்" அல்லது "சகோதரர்" என்று பெயரிட்டார். தாலிபான்கள் கடைசியாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது அவர் துணை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார்.

1968 ஆம் ஆண்டில் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்த அவர், 80வது ஆண்டுகளில் சோவியத்துக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் போராடினார். 1989 ஆம் ஆண்டு ரஷ்யர்கள் வெளியேறிய பிறகு, ஆப்கானிஸ்தானில் போர் புரியும் கட்சிகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது. அப்போதுதான் பராதர் தனது முன்னாள் தளபதியும் மைத்துனருமான உமருடன் கந்தஹாரில் ஒரு மதரஸாவை நிறுவினார். இருவரும் இணிந்து தாலிபான் அமைப்பை நிறுவினர். (படம்: ராய்ட்டர்ஸ்)

முன்னதாக தாலிபான் அரசு வீழ்த்தப்பட்ட போது, கூட்டணிப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பான ஒரு மூத்த இராணுவத் தளபதியாக பராதர் பணியாற்றினார் என ஐநா வெளியிட்ட தடை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது. பராதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு விடுதலையான பிறகு, அவர் தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை தாங்கினார், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் மிக முக்கியமான நபராக இருந்தார். (படம்: ராய்ட்டர்ஸ்)

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றுவது தவிர்க்க முடியாதது என்று சில வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தாலும்,  மின்னல் வேகத்தில் நடந்த ஆக்கிரமிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "ஆப்கானிஸ்தானில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நம் தேசத்திற்கு சேவை செய்து தேசத்தை பாதுகாக்கும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும், மேலும் ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும்" என்று தாலிபான் காபூலைக் கைப்பற்றிய பிறகு பராதர் கூறினார். (படம்: ராய்ட்டர்ஸ்)

தலிபானின் உச்ச மதத் தலைவரான ஹைபத்துல்லா அகுன்சாடா, இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் மத விஷயங்கள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவார் என்று தாலிபான் வட்டாரம் தெரிவித்தது. இதற்கிடையில், தலிபான்களின் பொது முகமாக இருக்கும் பராதர் நாட்டை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link