`கனவு இல்லம்` சாத்தியமே; குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், EMI குறித்த முழு விபரம்!
தனியார் துறை HSBC வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்து 6.45 சதவீதமாக குறைத்துள்ளது. இந்த சலுகை வீட்டுக் கடனை வேறு வங்கியிருந்து மாற்றும் போது கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் 31 டிசம்பர் 2021 வரை அமலில் இருக்கும். இது வங்கித் துறையில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும். இந்தக் கடன்களுக்கான பிராசஸிங் கட்டணத்தையும் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. புதிய கடன்களுக்கு HSBC வங்கி ஆண்டுக்கு 6.70 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. 20 வருடங்களுக்கு 30 லட்சம் கடனிற்கான உங்கள் EMI (வேறு வங்கியிருந்து கடனை மாற்றும் போது) ரூ.22,279 ஆக இருக்கும். புதிய வீட்டுக்கடனுக்கு, EMI ரூ.22,722 ஆக இருக்கும்.
கோடக் மஹிந்திரா (Kotak Mahindra) வங்கி அனைத்து வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களை 6.50 என்ற அலவில் வசூலிக்கிறது. நீங்கள் 20 வருடங்களுக்கு செலுத்தும் வகையில் 30 லட்சம் கடன் வாங்கினால், EMI ரூ.22,367 ஆக இருக்கும். வங்கி பிராசஸிங் கட்டணத்தை முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளது.
யெஸ் வங்கி 6.70 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனையும் வழங்குகிறது. இந்த சலுகை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே. கூடுதலாக, வேலை செய்யும் பெண்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு 6.65 சதவீதத்தில் (0.05 சதவீதம் கூடுதல் சலுகை) கடன் வழங்குகது. இந்த சலுகை 90 நாட்களுக்கு மட்டுமே. யெஸ் வங்கியில் இருந்து 20 வருடங்களுக்கான கால கட்டத்திற்கு ரூ .30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், இஎம்ஐ ரூ.22,722 ஆக இருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) 6.7 சதவீத வட்டியில் வீட்டுக் கடனை வழங்குகிறது. எஸ்பிஐயிலிருந்து 20 வருடங்களுக்கு ரூ .30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், இஎம்ஐ ரூ.22,722 ஆக இருக்கும். பண்டிகை கால சலுகையாக, வங்கி பிராஸசிங் கட்டணத்தை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பண்டிகை காலங்களுக்காக சிறந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது வீட்டுக் கடனுக்கு 6.60 சதவீத வட்டி வசூலிக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. பண்டிகை கால சலுகையாக, வங்கி பிராஸசிங் கட்டணத்தை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. PNB யில் இருந்து 20 வருடங்களுக்கு ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், EMI ரூ. 22,544 ஆக இருக்கும்.
பண்டிகை காலங்களில் பேங்க் ஆஃப் பரோடா (BoB) 6.75 சதவீத வீட்டுக் கடனை வழங்குகிறது. பண்டிகை காலங்களில் பிராசஸிங் கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளத்யு. நீங்கள் 20 வருடங்களுக்கு BoB யில் இருந்து ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால், EMI ரூ. 22,811 ஆக இருக்கும்.