IPL 2021: SRH கேப்டன் இந்த ஐபிஎல்லில் செய்யப்போகும் சாதனைகள் என்ன?
இன்னும் 2 டி 20 போட்டிகளில் பங்கேற்றால், வார்னர் 300 வது டி 20 போட்டிகளில் விளையாடிய வீர ஆவார். 300 டி 20 போட்டிகளில் விளையாடும் 32 வது வீரராக வார்னர் இருப்பார்.
இன்னும் 176 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும், 10000 டி 20 ரன்கள் எடுத்த சாதனையை செய்வார் டேவிட் வார்னர். கிறிஸ் கெய்ல், கீரோன் பொல்லார்ட் மற்றும் ஷோயப் மாலிக் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய 4வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார் டேவிட் வார்னர்.
டி 20 களில் 150 கேட்சுகளை முடிக்க டேவிட் வார்னருக்கு இன்னும் இரண்டு கேட்சுகள் மட்டுமே தேவை.
ஐபிஎல்லில் இன்னும் 5 சிக்ஸர்கள் எடுத்தால் 200 சிக்ஸர்கள் எடுத்த வீரர் என்ற பெயரைப் பெறுவார் டேவிட் வார்னர்.
ஐபிஎல்லில் கே.கே.ஆருக்கு எதிராக 1000 ரன்கள் முடிக்க டேவிட் வார்னருக்கு 88 ரன்கள் மட்டுமே தேவை, ஐ.பி.எல். இல் எந்த அணிக்கும் எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார் வார்னர்.