அமேசான் - பிளிப்கார்டில் OnePlus 12R 5G போனை தள்ளுபடி விலையில் வாங்கலாம்...!

Tue, 21 May 2024-8:50 pm,

OnePlus 12R ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் LTPO ProXDR டிஸ்ப்ளே உள்ளது. இதன் உச்ச பிரகாசம் 450நிட்ஸ், புதுப்பிப்பு வீதம் 120 ஹெர்ட்ஸ் மற்றும் பிக்சல் தெளிவுத்திறன் 2780 x 1264, டச் ஸ்வைபிங் 1000 ஹெர்ட்ஸ் மற்றும் ஸ்க்ரீன் டுபாடி ரெசல்யூஷன் 94.2 சதவீதம்.

OnePlus 12R ஸ்மார்ட்போனின் மூன்று வகைகள் உள்ளன. இதன் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. போனின் டாப் வேரியண்ட் 16ஜிபி ரேம் உடன் 256ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது.

OnePlus 12R 5G ஸ்மார்ட்போன் 5,500 mAh பேட்டரியுடன் வருகிறது. இது 100W SUPERVOOC சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கிறது.

OnePlus 12R 5G ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Gen 2 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது இரட்டை Dual Cryo-velocity VC கூலிங் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14.0 OS இல் இயங்குகிறது.

புகைப்படம் எடுப்பதற்காக, போனின் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 50MP Sony IMX890 பிரதான கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக போனின் முன்பக்கத்தில் 16எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் போனில் உள்ளன. Corning Gorilla Glass Victus 2  மற்றும் HDR10+ ஆகியவற்றை ஆதரிக்கிறது.

OnePlus 12R 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 முதல் தொடங்குகிறது. போனின் இரண்டாவது வேரியண்டின் விலை ரூ.42,999. போனின் டாப் வேரியண்ட் ரூ.45,999.

தற்போது இந்த ஸ்மார்ட்போனில் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், இந்த ஆஃபர் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளில் மட்டுமே. அமேசான் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் இரண்டிலும் சலுகைகள் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link