Indian Railways: ரயில் பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ‘6’ விதிகள்!

Tue, 14 Nov 2023-7:23 pm,

உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ரயில்வேயில், தினமும், சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய ரயில்வே வகுத்துள்ள சில முக்கியமான விதிகளைப் பற்றி பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு பெட்டியின் கதவுகளிலும் அவசர எச்சரிக்கை சங்கிலிகள் வைக்கப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், தேவை ஏதும் இல்லாமல் அதை இழுப்பது உங்களை நிறைய சிக்கலில் சிக்க வைக்கும். மருத்துவ அவசரநிலை, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், விபத்து அல்லது குழந்தை, முதியவர்கள் அல்லது ஊனமுற்ற நபர் அல்லது துணையை தவறவிட்டால், அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே அலாரம் சங்கிலியை இழுக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே விதிகள் கூறுகின்றன. 

விடுமுறை அல்லது பண்டிகை பயணச்சீட்டுகள் கிடைக்காத காரணத்தால், பயணிகள் தங்களுடைய அசல் இடத்திற்கான முன்பதிவு கிடைக்காமல் போகுலாம்.இந்நிலையில், பயணிகள், உண்மையான இலக்குக்கு முன்னதாக உள்ள ஒரு இடத்திற்கு ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். பின்னர், பயணம் செய்யும் போது, அவர்கள் TTE என்னும்  கூடுதல் கட்டணம் செலுத்தி பயணத்தை நீட்டிக்கலாம். பதிலுக்கு, TTE கூடுதல் பயண தூரத்திற்கான டிக்கெட்டை வழங்கலாம். இருப்பினும், இருக்கை மாற்றப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது,

ரயிலின் கீழ் படுக்கைகள் இருக்கைகளாகப் பயன்படுத்தப்படுவதால், பயணிகள் பகலில் நடுத்தர பெர்த்தை பயன்படுத்த கூடாது என்று விதி அறிவுறுத்துகிறது. இரவு 10 மணி முதல்  காலை 6 மணி வரை மட்டுமே, பயணிகள் நடு பெர்த்தில்  தூங்க முடியும். ஒரு பயணி நேர வரம்பை மீறும் பட்சத்தில், கீழ் பெர்த்தில் உள்ள பயணி அதற்கு மறுப்பு தெரிவிக்க உரிமை உண்டு.

சில சமயங்களில், நாம் பயணிகள் ரயிலை தவறவிடக்கூடிய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இருக்கலாம். இருப்பினும், பயணிகளுக்கு நியாயமான வாய்ப்பை வழங்குவதற்காக, இரு நிறுத்தங்கள் விதிப்படி, அடுத்த இரண்டு ஸ்டேஷன்கள் வரை டிக்கெட் பரிசோதகர் இருக்கையை மற்றொரு பயணிக்கு மாற்ற முடியாது.  அடுத்து இரண்டு ஸ்டேஷன்களை பயணி அடைய வாய்ப்பு வழங்கும் வகையில், அடுத்த இரண்டு நிறுத்தங்களை ரயில் கடக்கும் வரை வருகை தராத பயணிகளின் இருக்கை யாருக்கும் ஒதுக்கப்படாது.

 

ரயில் பயணத்தின் போது பயணிகளை தொந்தரவு செய்யாமல் இருப்பது அவசியம். பயணிகள் சரியாக ஓய்வெடுக்க, இரவு விளக்குகளைத் தவிர, பெட்டியில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும். இதனால்தான் ரயில்களில் வழங்கப்படும் உணவைக் கூட இரவு 10 மணிக்கு மேல் வழங்க முடியாது. TTE கூட குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே டிக்கெட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக, அனைத்து பயணிகளும் அதிக சத்தம் போடக்கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வெடுக்கும் அல்லது தூங்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தொலைபேசி அழைப்பின் போது சத்தமாக பேசுவதை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக இந்திய ரயில்வேக்கு பல புகார்கள் வந்தபோது இந்த விதி வகுக்கப்பட்டது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link