குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் CNG கார்கள்
மாருதி சுஸுகி வேகன்ஆரின் BS VI S-CNG பதிப்பும் ஒரு நல்ல தேர்வாகும். சிஎன்ஜியில் மாருதி வேகன்ஆர் மைலேஜ் லிட்டருக்கு 32.52 கிமீ கொடுக்கிறது. இந்த காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.83 லட்சம். நிறுவனம் அதன் இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது - வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ மற்றும் வேகன்ஆர் எஸ்-சிஎன்ஜி எல்சிஐ (ஓ). இதில் 998சிசி, 3 சிலிண்டர் இன்ஜின் உள்ளது.
டாடா மோட்டார்ஸ் Tigor இன் CNG பதிப்பை (பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் அமைப்பு ஒன்றாக) TATA Tigor iCNG கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7,69,900. இது XZ மற்றும் XZ + என இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. XZ+ வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8,29,900.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் டியாகோ மாடலின் சிஎன்ஜி வகையான டாடா டியாகோ ஐசிஎன்ஜியை அறிமுகப்படுத்தியது. இந்த கார் சிஎன்ஜியில் 26.49 கிமீ/கிலோ மைலேஜ் தருகிறது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6,09,900. இது அனைத்து வரிகளுக்கு பிந்தைய விலை. தானியங்கி எரிபொருள் மாற்றும் தொழில்நுட்பமும் உள்ள கார் இது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சிஎன்ஜி கார் சான்ட்ரோவும் சிறந்த தேர்வாகும். இந்த காரை 1.1L Bi-Fuel (CNG உடன் பெட்ரோல்) விருப்பத்தில் வாங்கலாம். இந்த காரின் மைலேஜ் 30.4 கிமீ/கிலோ. சிஎன்ஜி வேரியண்டில் உள்ள காரின் ஆரம்ப விலை ரூ.6,09,900.
மாருதி சுஸுகியின் மற்றொரு கார் எஸ்-பிரஸ்ஸோ. இந்த கார் சிஎன்ஜியில் லிட்டருக்கு 31.2 கிமீ மைலேஜையும் தருகிறது. சிஎன்ஜி வகையிலான இந்த காரின் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5,17,500.
மாருதியின் எம்பிவி காரான எர்டிகாவையும் சிஎன்ஜியில் வாங்கலாம். இதன் CNG மைலேஜ் 26.08 kmpl ஆகும். இந்த காரின் சிஎன்ஜி வகையின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9,66,500 லட்சம்.
சிஎன்ஜி வேரியண்டில் ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து AURA என்ற செடானையும் வாங்கலாம். இந்த CNG காரின் விலை (1.2 l Kappa Dual VTVT Bi-Fuel CNG 5-Speed Manual AURA - S CNG) டெல்லி எக்ஸ்-ஷோரூம் ரூ.7,67,000. இதன் மைலேஜ் 28 கிமீ/கிலோ.
சிஎன்ஜியில் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் மாருதியின் ஆல்டோவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சிஎன்ஜி ஆல்டோவின் மைலேஜ் லிட்டருக்கு 31.5 கிமீ ஆகும். இந்த காரில் 796 cc, 3 சிலிண்டர்கள் F8D இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்டில் இருக்கும் இந்த காரின் தொடக்க டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.76 லட்சம்.