Powerful Passports: உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள்
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஜப்பான் பாஸ்போர்ட் ஆகும். இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.
சிங்கப்பூர் இரண்டாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடு. இதன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு எளிதாக பயணம் செய்யலாம்.
தென் கொரியர்கள் 192 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம். இந்த நாடுகளுக்குச் செல்ல அவர்களுக்கு விசா தேவையில்லை.
ஜெர்மன் குடிமக்கள் 190 நாடுகளில் விசா ஆன் அரைவல் வசதியை பெற முடியும். இந்த நாடும் முதல் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஸ்பெயின் குடிமக்கள் 190 நாடுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
பின்லாந்து மக்கள் விசா இல்லாமல் 189 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இந்த நாடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் எந்தவிதமான சிரமத்தையும் சந்திக்க வேண்டியதில்லை.
இத்தாலி பின்லாந்திற்கு இணையான தரவரிசையில் உள்ளது. அதன் குடிமக்கள் 189 நாடுகளில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வசதியாகப் பயணம் செய்யலாம்.
லக்சம்பர்க் ஒரு சிறிய நாடு என்று சொல்லலாம். அதன் மக்கள் தொகையும் மிகக் குறைவு. ஆனால் பல வளர்ந்த நாடுகளை அதன் எல்லையாக கொண்டுள்ளது. இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 189 நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.
ஆஸ்திரியாவுக்குச் செல்வது அனைவரின் கனவு, ஆனால் இங்குள்ளவர்கள் எளிதாக மற்ற நாடுகளுக்குச் செல்ல முடியும். ஆம், அதன் குடிமக்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் 188 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
டென்மார்க் குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டுடன் 188 நாடுகளுக்கு வசதியாக பயணம் செய்யலாம். இந்திய பாஸ்போர்ட் 87வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.