August 15: இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் பிற நாடுகள் எவை தெரியுமா..!!

Fri, 13 Aug 2021-6:26 pm,

ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியா சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்தது. இந்த நாள் இந்திய வரலாற்றில் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

தில்முன் நாகரிகத்தின் பண்டைய நிலமான பஹ்ரைன், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடி  1971  ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே, பஹ்ரைன்,  அரேபியா மற்றும் போர்ச்சுகல் உட்பட பல நாடுகளால் ஆளப்பட்டது.

காங்கோ ஜனநாயகக் குடியரசு  (The Democratic Republic of the Congo ) 15 ஆகஸ்ட் 1960 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியாளர்களிடமிருந்து முழுமையான சுதந்திரத்தைப் பெற்றது. இந்த நாடு மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளது.  1880 ஆண்டில் பிரெஞ்சு ஆட்சியாளர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. முதலில் இந்த நாடு பிரெஞ்சு காங்கோ, பின்னர் 1903 ஆம் ஆண்டில் மத்திய காங்கோ என்று அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஃபுல்பர்ட் யூலூ (Fulbert Youlou) நாட்டின் முதல் ஜனாதிபதியாக ஆனார். அவர் 1963 அம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.

வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டும் ஆகஸ்ட் 15 அன்று தங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 இரு நாடுகளிலும்  'ஜப்பானிடம் இருந்து சுதந்திர தினமாக' கொண்டாடப்படுகிறது. 1945 இல், அமெரிக்கா மற்றும் சோவியத் படைகள் இணைந்து கொரியா மீதான 35 ஆண்டு கால ஜப்பானிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திர நாடாக அறிவித்தன. இரண்டாம் உலகப் போர் 1945 இல் இந்த நாளில் முடிந்தது. இதற்குப் பிறகு, 1948 இல், சோவியத் ஆதரவு பகுதி வட கொரியா என்றும்,  அமெரிக்காவின் ஆதரவு பகுதி தென் கொரியா எனவும் பிரிக்கப்பட்டது. தென் கொரியா அதிகாரப்பூர்வமாக கொரியா குடியரசு என்று அழைக்கப்படுகிறது.

 

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டைன் (Liechtenstein ) 1866 ஆம் ஆண்டில் ஜெர்மன் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய தினத்தைக் கொண்டாடும் பழக்கம் 1940 இல் தொடங்கப்பட்டது. 1940 ஆகஸ்ட் 5ம் தேதி, லீச்சென்ஸ்டைனின் அதிபரின் அரசாங்கம் ஆகஸ்ட் 15 ம் தேதியை  நாட்டின் தேசிய தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link