பிரதமர் மோடி முதல் ட்ரம்ப் வரை; உலகின் 5 பெரிய தலைவர்களின் சம்பளம்

Sat, 12 Dec 2020-4:19 pm,

அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது, ​​டொனால்ட் டிரம்ப் தான் சம்பளம் ஏதும் வாங்க மாட்டேன் என்று கூறினார். இருப்பினும், அமெரிக்க அரசியலமைப்பு இதை அனுமதி அளிக்கவில்லை. அதனால்தான் அதிபர் டிரம்ப் சம்பளம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது ஆனால் அவர் தனது சம்பளம் முழுவதையும் நன்கொடை அளிக்கிறார். முன்னாள் அதிபர்கள் ஜான் எஃப். கென்னடி மற்றும் ஹெர்பர்ட் ஹூவர் போன்ற செல்வந்தர்கள் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் தங்கள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர். இருப்பினும், அதிபர்  டிரம்ப் மன்ஹாட்டன், நியூயார்க் மற்றும் பிற இடங்களில் உள்ள தனது வணிக நிறுவனத்திலிருந்து வருமானம் வருகிறது. அவரது மொத்த சொத்துக்கள் 2.5 பில்லியன் டாலர்கள். இதன் மூலம் அவர் முதல் பில்லியனர் அமெரிக்க அதிபர்  ஆக உள்ளார். யுஎஸ்ஏ டுடேவின் பட்டியலின்படி, அதிக சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். சம்பளம்: ஆண்டுக்கு 2.94 கோடி டாலர்கள்

அக்டோபர் 12, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 2020 ஜூன் வரை தனது நிதி நிலையை தானாக முன்வந்து வெளிப்படுத்தினார். அந்த அறிக்கையின்படி, அவரது அசையும் சொத்துக்கள் கடந்த நிதியாண்டில் 1.39 கோடியிலிருந்து 1.75 கோடியாக 26.26% அதிகரித்துள்ளன. பிரதமர் தனது சம்பளத்தில் பெரும்பகுதியை செலவு செய்யாஅமல் முதலீடு செய்துள்ளதால், அவரது செல்வம் அதிகரித்துள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் COVID-19 நெருக்கடியால் தங்களின் சம்பளத்தை 30% குறைக்க முடிவு செய்தனர். பிரதமர் மோடிக்கு ஒரு மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கிறது, இது உலகின் அனைத்து தலைவர்களையும் விட மிகக் குறைவு. சம்பளம்: ஆண்டுக்கு ₹24 லட்சம்

இந்த வார தொடக்கத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது சம்பளத்தில் குடும்பம் நடத்தமுடியாததால் பதவியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறினார். பிரதமராக பதவி ஏற்கும் முன்பு, போரிஸ் ஜான்சன் ஆங்கில நாளேடான தி டெலிகிராப்பில் பணிபுரிந்தார். அங்கு அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ .2.5 கோடி. இரண்டு உரைகளை மட்டுமே கொடுத்து ஒரு மாதத்தில் ரூ.1,17,98,128 சம்பாதித்தார். இது பிரிட்டன் பிரதமராக அவர் சம்பாதிக்கும் பணத்தை விட மிக அதிகம். சம்பளம்: ₹1.43 கோடி

கனடா சிறந்த வகையில் சம்பளம் வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. இந்த விதி இங்குள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் பொருந்தும். உலகில் அதிக சம்பளம் வாங்கும் 20 நபர்களில் கனடா பிரதமரும் ஒருவர். சம்பளம்: ஆண்டுக்கு 1.96 கோடி டாலர்

பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் பதவியேற்றதிலிருந்து நாட்டின் உள் விவகாரங்களில் அவர் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், அவரது அரசு கோவிட் -19 நெருக்கடியை கடுமையாக எதிர்கொண்டது என்ற வகையில் பாராட்டுக்களை பெற்றுள்ளார். ஜசிந்தா ஆர்டெர்ன் தனது சிறப்பான பணி காரணமாக மீண்டும் வெற்றி பெற்றார். நியூசிலாந்தின் தேர்தல் வரலாற்றில் 80 ஆண்டுகளில், ஜசிந்தாவின் தேர்தல் பல வகைகளில் மிகவும் முக்கியமானது. நியூசிலாந்தின் பிரதமராக, அதிக சம்பளம் பெறும் உலகத் தலைவர்களின் பட்டியலில் ஆர்டெர்ன் 7 வது இடத்தில் உள்ளார். சம்பளம்: ஆண்டுக்கு $339,862 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link