நன்றாக சாப்பிட்ட பின்னும் அடிக்கடி பசி எடுக்கிறதா... காரணங்களும்... தீர்வுகளும்
பசி என்பது இயற்கையான உணர்வு என்றாலும், அடிக்கடி பசி எடுப்பது, எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பது, ஆரோக்கியத்திற்கான அறிகுறி அல்ல. இதற்கு ஹார்மோன் குறைபாடு உட்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை: நம் உடலில் சுரக்கும் கிரெலின் என்ற ஹார்மோன், வயிறு காலியாக இருக்கும் போது, சாப்பிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை, நமக்கு பசி உணர்வின் மூலம் மூளைக்கு சமிக்ஞையை கொடுக்கிறது. ஆனால் கிரெலின் ஹார்மோன் சமநிலையில் இல்லை என்றால், உங்களுக்கு அடிக்கடி காரணம் இல்லாமல் பசி உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகமாக சுரப்பதால், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடும் எண்ணம் மனதில் ஏற்படும். இதன் காரணமாக உடல் எடையும் அதிகரிக்கும் அபாயம் உண்டு.
தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பசியை தூண்டும் கிரெலின் என்ற ஹார்மோன் அளவிற்கு அதிகமாக சுரப்பது கூட, சாப்பிட்டபின் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும், லெப்டினில் என்ற ஹார்மோனின் அளவு குறையும். இதனால் வயிறு நிரம்பிய உணர்வும் ஏற்படாது.
புரதச்சத்து நிறைந்த உணவுகள்: அடிக்கடி பசி எடுப்பதை தவிர்க்க விரும்பினால், புரதம் நிறைந்த உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பசியை அடக்கும் ஆற்றல் புதன்சி சத்து உணவுகளுக்கு உண்டு. இதனால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரியும் வெகுவாக குறையும். பீன்ஸ், பருப்பு வகைகள், முட்டை சிக்கன் ஆகியவை புரதச்சத்து நிறைந்த சில உணவுகள்.
நார்ச்சத்து நிறைந்த உணவு: புரத சத்தை போலவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளும், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். மேலும் உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுப்பதால், அதிகம் பசி எடுக்காது. நான் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள உணவில், ஓட்ஸ் முழு தானியங்கள், ஆரஞ்சு போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
போதுமான தூக்கம்: ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம். இது ஆழ்ந்த தூக்கமாகவும் இருக்க வேண்டும். இதனால், பசியை தூண்டும் ஹார்மோன்கள் உற்பத்தி கட்டுப்பாட்டில் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு மண்டலமும் சிறப்பாக செயல்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.