இந்தியாவின் ECG இணைக்கப்பட்ட சூப்பர் Smartwatches இவை தான்....
ஃபிட்பிட் சென்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஒரு புதிய எலக்ட்ரோடெர்மல் ஆக்டிவிட்டி சென்சார் (EDA) உடன் வருகிறது. இந்த சென்சார், தோலில் உள்ள வியர்வை அளவை அளவிடுகிறது. வாட்ச் டயலின் மேல் உங்கள் உள்ளங்கையை வைப்பதன் மூலம் இது செயல்படுகிறது. EDA ஸ்கேன் பயன்பாடு உங்கள் மன அழுத்த அளவையும் அளவிடும். உங்கள் இதய துடிப்பு மற்றும் இதய துடிப்பு மாறுபாட்டை கண்காணிக்க ECG உள்ளது. இதன் மூலம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அறிகுறிகளைக் கூட கண்டறிய முடியும். தோல் வெப்பநிலை சென்சார், வரவிருக்கும் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் மாதவிடாய் வரப் போவதையும் கண்டறிய உதவும். சுவாச வீதம் மற்றும் SpO2 போன்ற கூறுகளையும் அளவிட முடியும். 12 நிமிடம் சார்ஜ் போட்டால் போதும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஆனது இரத்த ஆக்ஸிஜன் செறிவு (SpO2) கண்காணிப்பு மற்றும் நிலையான இதய துடிப்பு கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனையும் (AFib) கண்டறிய முடியும் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) அறிக்கையை வழங்க முடியும். சாதனம் வாட்ச்ஓஎஸ் 8 ஐ இயக்குகிறது, இது மேம்படுத்தப்பட்ட ப்ரீத் ஆப்ஸுடன் வருகிறது, இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மேம்படுத்தப்பட்ட தூக்க கண்காணிப்புடன் வருகிறது, இது தூங்கும்போது, சுவாச வீதம் மற்றும் தூக்கத்தின் போக்குகளைக் கண்காணிக்கும்.
வீட்டில் இருக்கும் போது ஆரோக்கியமாக இருக்க விரும்புவோருக்கு, Samsung Health ஆப்ஸுடன் வருகிறது Samsung Galaxy Watch 3. இது 120 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வீட்டுப் பயிற்சி திட்டங்களை வழங்குகிறது, எனவே உங்கள் வாட்ச்சில், உங்கள் உடற்பயிற்சியின் நிலைமையை கண்காணிக்க முடியும்
சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 ஆரோக்கிய அம்சங்களில் இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர், உடல் அமைப்பை அளவிடும் திறன், தூக்க மேலாண்மை போன்ற பல அம்சங்களுடன் வருகிறது. இதய துடிப்பை கண்காணிப்பதோடு, ECGஐயும் அளவிட முடியும். ஸ்மார்ட்வாட்ச் ஒரு சுற்று வாட்ச் டயல் மற்றும் மாற்றக்கூடிய பட்டைகளுடன் வருகிறது, ஸ்மார்ட்வாட்ச்கள் 90 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள், கலோரிகளைக் கண்காணிக்கும் திறன், படிகளை எண்ணும் திறன் கொண்டது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4.
ஃபிட்பிட் சார்ஜ் 5 ஆனது இதய துடிப்பு மானிட்டர், ஈசிஜி மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்கின் டெம்பரேச்சர் டிராக்கர் மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. இது 20க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகளைக் கொண்டது.