வார ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை!

Sun, 05 Mar 2023-9:49 pm,

மேஷம்: மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். 

ரிஷபம் : புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மிதுனம்: அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். பதட்டமில்லாத செயல்பாடுகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 

கடகம்: வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். 

சிம்மம்: உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நண்பர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் சிலருக்கு சாதகமாகும்.

கன்னி: வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக அமையும். புதிய வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

துலாம்: வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். 

விருச்சிகம்: உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். நிபுணர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

தனுசு: கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வீடு, வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவு பெறும். 

மகரம்: உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். 

கும்பம்: நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பழைய மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். 

மீனம்: கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link