AI கருவியான ‘Chat GPT’ மனிதர்களுக்கு வரமா அல்லது சாபமா!
உள்ளடக்கத்தை எழுதுவது முதல் பரிந்துரைகளை வழங்குவது அல்லது எந்தவொரு கேள்விக்கும் சரியான பதிலைப் பெறுவது வரை, அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது செய்யும்வேலைகள் எந்த வகையில் அச்சுறுக்கதலுக்கு உள்ளாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கூகிள் தேடலுடன், இந்த கருவி இந்தியா உட்பட உலகின் அனைத்து வேலைகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிற. சில வேலையை மனிதர்கள் செய்தால் நிறைய நேரம் எடுக்கும் நிலையில், இது போன்ற பல பணிகளை விரைவாகச் செய்யும் திறன் கொண்டது.
எவரும் இந்தக் கருவியை எளிதாகப் பயன்படுத்தி, கடினமான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியலாம். இந்த கருவி மிகவும் மேம்பட்டதாக இருப்பதால் கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தும் என்று மக்கள் கருதுகின்றனர்.
சேட்GPT மிகவும் வேகமானது. உங்கள் அன்றாட வேலைகளில் இதைப் பயன்படுத்தலாம், அத்துடன் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய விரிவான தகவலை நீங்கள் விரும்பினால், அதைப் பயன்படுத்தலாம்.
Chat GPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும், இது உங்களிடம் உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கும் திறன் கொண்டது. ஆனால் இது பொதுவான தேடுபொறியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, இது மனிதனைப் போன்ற சிந்தனை மற்றும் புரிதலைக் கொண்டுள்ளது. இது கூகுள் தேடலை போல இணைப்பை வழங்காது. ஆனால் அதற்கு பதிலாக சரியான பதிலை அளிக்கிறது.