தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு! இந்த மாதத்தில் தங்கம் ₹8000 குறைந்துள்ளது..!!

Thu, 26 Nov 2020-6:40 pm,

சென்னையில் இன்று, அதாவது நவம்பர் 26,  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின்  (22 கேரட்)  விலை 4,613 ரூபாயாக உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

இன்று டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.44705 ஆகும். நேற்று 10 கிராமுக்கு ரூ.44824 ஆக இருந்தது, அதாவது இன்று விலை ரூ.119 குறைந்துள்ளது. இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையும் 130 ரூபாய் குறைந்துள்ளது.

டெல்லி தவிர, மற்ற மெட்ரோ நகரங்களிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. பெங்களூரில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .46200, கொல்கத்தாவில் ரூ .50070, மும்பையில் ரூ .49800

இன்று சந்தையில் வெள்ளி விலையும் குறைந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ .64,800 ஆக உள்ளது. கிராமும் 65 ருபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து நம்பிக்கையான தகவல்கள் வருவதை அடுத்து தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் அரசியல் நிச்சயமற்ற தன்மை முடிந்துவிட்டது. இதுவே தங்கத்தின் விலை குறைய காரணம்.

கடந்த 6 மாதங்களில் நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில், தங்கம் சுமார் 5% அதிகரித்தது. அடுத்த மாதத்தில், ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலை 9% அதிகரித்தது. ஆனால் இதற்குப் பிறகு, தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான குறைந்து வருகிறது. ஆகஸ்டில், தங்கம் 3%  குறைந்தது. நவம்பரில் தங்கம் விலை 4% குறைந்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link