உச்சம் தொட வைக்கும் மச்சம்: இந்த இடங்களில் மச்சம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி!

Thu, 13 Jan 2022-6:11 pm,

கன்னத்தில் மச்சம் இருப்பது மிகவும் நல்லது. கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள். பண விஷயங்களிலும் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். அத்தகையவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்போடு இருப்பார்கள். 

உடலின் எந்தப் பகுதியிலும் சிவப்பு நிற மச்சம் இருப்பது நல்லதாகக் கருதப்படவில்லை. இந்த மச்சம் உடலில் உள்ள வலியைக் குறிக்கிறது. உடலில் சிவப்பு மச்சம் உள்ளவர்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

நெற்றியில் மச்சம் இருக்கும் நபர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும் தர்க்கரீதியானவர்களாகவும் இருப்பார்கள். 

கையில் மச்சம் இருப்பவர்கள் பணத்திற்கு குறைவில்லாமல் இருப்பார்கள். இவர்களிடம் அதிக பணம் இருப்பதோடு சேமிப்பதிலும் இவர்கள் வல்லவர்கள்.

வயிற்றில் மச்சம் இருப்பவர்கள் உணவில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு, அவர்கள் ஆசைப்படுவதைப் போலவே எப்போதும் சாப்பிட மிகவும் சுவையான உணவு கிடைத்துக்கொண்டே இருக்கும். 

மோதிர விரலின் இரண்டாம் பாகத்தில் மச்சம் உள்ளவர்கள், உறவில் பலவீனமாக இருப்பதோடு, நீண்ட நாட்களுக்கு யாருடனும் உறவைப் பேண முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் நல்ல உறவுகளை எளிதில் இழந்து விடுகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link