அடுத்த தோனி, 10 கோடி கொடுக்கவும் தயாராக இருந்த கங்குலி - யார் இந்த குமார் குஷாக்ரா?
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குமார் குஷாக்ரா டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் 7.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவருக்கு 10 கோடி ரூபாய் கொடுக்கவும் டெல்லி அணியின் இயக்குநர் கங்குலி தயாராக இருந்தார்.
ஏலத்தில் அவருடைய பெயர் வரும்போது டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே ஏலம் எடுக்க ஆர்வமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குமார் குஷாக்ராவை ஏலம் எடுக்க முயற்சித்தது.
ஏனென்றால் குமார் குஷாக்ரா ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தோனி விளையாடிய அணிக்காக இப்போது விளையாடிக் கொண்டிருப்பவர். தோனி உடன் பழக்கமும் இருக்கிறது.
இருப்பினும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் அதிக விலையை கொடுக்க தயாராக இருந்ததால் சென்னை சூப்பர் கிங் அணி குமார் குஷாக்ராவை ஏலம் எடுப்பதில் இருந்து விலகியது.
கடைசிவரை விடாப்பிடியாக இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் கங்குலி 7.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். அவருக்கு 10 கோடி ரூபாய் கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஏலத்துக்கு முன்பே கங்குலி குமார் குஷாக்ரா தந்தையிடம் தெரிவித்திருக்கிறார்.
ஏலம் முடிந்த பிறகு குமார் குஷாக்ரா பேசும்போது, ஐபிஎல் டெஸ்டுக்கு குமார் குஷாக்ராவுடன் சென்றபோது கங்குலியை நாங்கள் சந்தித்தோம். அப்போது சிக்சர் அடிக்கும் திறன் மற்றும் விக்கெட் கீப்பிங் ஸ்டைலை பார்த்து நிச்சயம் ஏலம் எடுப்பதாக உறுதியளித்தார். அதனை இப்போது செய்தும் காட்டியிருக்கிறார் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
கங்குலி பேசும்போது, சோதனையின்போது குமார் குஷாக்ராவை சந்தித்தேன். அவரின் கீப்பிங்கில் தோனியிடம் இருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் கூர்மையை என்னால் பார்க்க முடிந்தது. அதனால் அவரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என முடிவு செய்தேன் என தெரிவித்தார்.