பிக்பாஸ் 8 நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 முக்கிய சீரியல்கள்! என்னென்ன தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியதை அடுத்து, இந்த முடிவுக்கு நிகழ்ச்சியின் குழுவினர் வந்து விட்டனர்.
அனைத்து சீசன்களை போலவும், இந்த 8வது சீசனிலும் புதுப்புது விஷயங்கள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த காத்திருக்கின்றன.
“ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு” என்ற பஞ்ச் டைலாக்குடன் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் ஒளிபரப்பாகின. அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, இந்நிகழ்ச்சியின் 8வது சீசனின் முதல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் 8வது சீசனில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்கள், பார்வையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதை அடுத்து, 4 சீரியல்கள் முடிவுக்கு வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
வீட்டுக்கு வீடு வாசப்படி:
100 எபிசோடுகளை கடந்த சீரியல், வீட்டுக்கு வீடு வாசப்படி. இது, பெரிதாக டிஆர்பியில் ஸ்கோர் செய்யவில்லை என்பதால் முடிவு பெற இருக்கிறதாம்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல், பனிவிழும் மலர்வனம். இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல், முத்தழகு. இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் தொடர்களுள் ஒன்று, பாக்கியலக்ஷ்மி. இந்த தொடர் தொடர்ந்து டிஆர்பியில் சறுக்கி வருவதால், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.