லக்கி பாஸ்கர் to ப்ளடி பெக்கர்! இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
பிரசாந்த் நடிப்பில், ஆகஸ்ட் மாதம் வெளியான படம், அந்தகன். இந்த படம், தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
ஜெயம் ரவி நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியான படம், ப்ரதர். இந்த படம், தற்போது ஜீ 5 தளத்தில் வெளியாக இருக்கிறது.
கவின் நடிப்பில், ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான படம், ப்ளடி பெக்கர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார். இப்படம், நவம்பர் 29ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி, வெற்றி பெற்ற படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.
ஷ்ஷ்ஷ்...திரைப்படம், இந்தியில் உருவான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் தமிழ் ரீ-மேக் ஆகும். இந்த படத்தை, ஆஹா தளத்தில் காணலாம்.
தீபாவளி போனஸ் படத்தில், விதார்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை, ஆஹா தளத்தில் நாளை முதல் காணலாம்.
பாராஷூட் தமிழ் வெப் தொடரை, நெட்ஃப்ளிக்ஸில் நாளை முதல் காணலாம்.
KA தெலுங்கு படத்தை, ஈடிவி வின் தளத்தில் காணலாம்.
விகடகவி, தெலுங்கு தொடரை, ஜீ 5 தளத்தில் காணலாம்.
சிக்கந்தர் கா முகாதர் படத்தில், தமன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த இந்தி படத்தை, நெட்ஃப்ளிக்ஸில் நாளை முதல் பார்க்கலாம்.
பாய்ஸ் கில்ஸ் வர்ல்ட் படத்தை லயன்ஸ் கேட்ஸ் ப்ளே தளத்தில் பார்க்கலாம்.
மேற்கூறியவை மட்டுமன்றி, ஓடிடியில் வெளியாகும் சில படங்களும் தொடர்களும்:
அப்புடோ இப்புடோ எப்புடோ, தெலுங்கு படத்தை அமேசான் ப்ரைமில் காணலாம். கிரிஷ்னம் ப்ரனய சகி கன்னட படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம். தி மேட்னஸ் தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். செஸ்ட் நட் ஆங்கில படத்தை, அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். சஸ்பிஷன் ஆங்கில படத்தை, அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். ஆசாஃப் துருக்கி மொழி படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். அவர் லிட்டில் சீக்ரெட் படத்தை, ஆங்கிலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். தி வைல்ட் ரோபோட் படத்தை, ஆங்கிலத்தில் BMS தளத்தில் பார்க்கலாம். சுனாமி ஆங்கில படத்தை, ஹாட்ஸ்டார் தொடரில் பார்க்கலாம். ஹெர் மலையால தொடரை, மனோரமா மேக்ஸ் தளத்தில் பார்க்கலாம். பாரிஸ் கிரிஸ்மஸ் வால்ட்ஸ் படத்தை, ஆங்கிலத்தில் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். தி ட்ரங்க் கொரியன் தொடரை, நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். தி ஸ்னோ சிஸ்டர் நார்வேகன் மொழி தொடரை, நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். டிவோர்ஸ் கி லியே குஷ்பி கரேகா இந்தி தொடரை ஜீ 5ல் பார்க்கலாம்.