இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?
நடிகர்கள் சூர்யா ஜோதிகாவின் மூத்த மகள், தியா. 2007ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தற்போது தனது பெற்றோருடன் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
17 வயதாகும் தியா, தற்போது மும்பையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது. தியாவிற்கு படிப்பில் மட்டுமல்ல, பள்ளியில் நடைபெறும் திறன் விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருக்கிறதாம்.
சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் மகன் தேவ், தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றார். இதே போல தியாவும் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
எப்போதும், திரை நட்சத்திரங்களின் பிள்ளைகள் சினிமாவிற்கு வருவது பொதுவான விஷயமாகும். விஜய், சூர்யாவில் ஆரம்பித்து, விஜய் சேதுபதியின் மகன் வரை அப்படித்தான் திரையுலகிற்குள் நுழைந்திருக்கின்றனர். இந்த நிலையில், சூர்யாவின் மகள் குறித்த ஒரு செய்தியும் தற்போது வைரலாகி வருகிறது.
தியா, மாணவர்களுக்கான ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த படத்திற்காக அவருக்கு விருதும் கிடைத்திருக்கிறது.
தியாவின் விருது புகைப்படத்தையும், அவரது டாக்குமெண்ட்ரி போஸ்டர் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கும் சூர்யா-ஜோதிகா, தங்களது மகளை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர்.
இயக்குநராக மாறியிருக்கும் தியா, வருங்காலத்தில் சினிமாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.