நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?

Sun, 17 Nov 2024-11:40 am,
Naanum Rowdy Dhaan

2015ஆம் ஆண்டில் வெளியான நானும் ரௌடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். நயன்தாரா ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை, தனுஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் இருந்துதான் விக்கியும் நயனும் காதலிக்க ஆரம்பித்தனர். பின்னர், 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை ஆவணப்படமாக நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட இருக்கிறது. 

Nayanthara Dhanush

Nayanthara Beyond the Fairy Tale என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நானும் ரௌடி தான் படத்தில் இடம் பெற்றிருந்த BTS வீடியோ மற்றும் பாடல்களை இணைக்க படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், தனுஷ் இதற்கு எதிராக legal notice அனுப்பி, அதற்கு ஈடாக 10 கோடியும் கேட்டிருக்கிறார். 

 

Nayanthara Dhanush

தனுஷ் இப்படி பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை நயன்தாரா 3 பக்க கடிதமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். இதில், “ரசிகர்கள் முன்பு நீங்கள் உங்களை காண்பித்து  கொள்வதில், உண்மையாக நீங்கள் பாதி கூட இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். 

தனுஷ் இவ்வாறு செய்துள்ளது நயன்தாரா மட்டுமன்றி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதையடுத்து, ஒரு நடிகை நயனுக்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். 

அந்த நடிகை, வேறு யாருமில்லை பார்வதிதான். நயனின் பதிவை ஸ்டோரியில் போட்டிருக்கும் அவர், சல்யூட் செய்யும் இமோஜியை சேர்த்திருக்கிறார். 

பார்வதியும், தனுஷும் மரியான் படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் இப்படி செய்துள்ளதை கேள்விப்பட்ட ரசிகர்கள், இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பதால், அவரைப்போலவே இப்போது அவர் மாறிவிட்டதாகவும் சில நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்திருக்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link