47 வயதில் அப்பா ஆகும் பிரபல நடிகர்? திருமணமான 1 வருடத்தில் நல்ல செய்தி..
கோலிவுட் திரையுலகில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகராக இருக்கிறார், ரெடின் கிங்க்ஸ்லி. இவரது ஸ்பெஷலான வசன உச்சரிப்புகள் இவர் காமெடிக்கு பலமாக அமைந்திருக்கிறது.
ரெடின் கிங்ஸ்லி-நெல்சன் திலீப்குமார், கவின் ஆகியோர் ஒரே நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் ப்ளடி பெக்கர் படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர்.
பல ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு, தற்போது திரைத்துறையில் பெரிய நிலைக்கு வந்திருக்கும் இவர், கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது.
சங்கீதா-ரெடின் திருமணத்தின் போதே பலர் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். தற்போது இவர்களின் வீட்டிலிருந்து இன்னொரு நல்ல செய்தி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சங்கீதா-ரெடின் ஜோடி, இந்த விஷயம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் இன்னும் வெளியிடவில்லை.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலர், தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.