குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் முக்கிய போட்டியாளராக பங்கேற்ற மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் சண்டை மூண்டது.
பிரியங்கா, பிரபல தொகுப்பாளராக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் குக் ஆகத்தான் கலந்து கொண்டார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களில் கோமாளியாக வந்த மணிமேகலை, 5வது சீசன் முதல் தொகுப்பாளராக பங்கேற்றார்.
கடந்த வாரம், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார். குக் ஆக வந்த பெண் தொகுப்பாளர், நிகழ்ச்சியில் தன் வேலையை விட்டுவிட்டு பிறரின் வேலைகளை பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மணிமேகலை, என்ன நடந்தது என்பதை தனது யூடியூப் பக்கத்திலும் வீடியோவாக பதிவிட்டார். இதையடுத்து இவருக்கு ஆதரவாக பலர் கொடு பிடிக்க ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், சமூக வலைதளம் முழுவதும் பிரியங்காவை ட்ரோல் செய்தும், வெறுப்பை உமிழ்ந்தும் பலர் பதிவுகளை வெளியுட்டு வருகின்றனர்.
பிரியங்கா-மணிமேகலை சண்டையில், குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களும் ட்ரோல்ஸ்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெற்றிருக்கும் அனைவருக்குமே அவர்கள் வரும் ஒரு நாள் ஷூட்டிற்கான சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் பிரியங்காவிற்கு வழங்கப்படும் சம்பளம் குறித்தும் மணிமேகலைக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.
பிரியங்காவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு சுமார் 18 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மணிமேகலைக்கு 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக பேசப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.