ரேஷன் கடை குட்நியூஸ்: குடும்ப அரிசி அட்டைத்தாரர்களின் கைரேகையில் இனி இந்த கவலை இருக்காது!

Wed, 04 Dec 2024-12:41 pm,

ரேஷன் பொருட்கள் குடும்பத்தில் இருக்கும்  மொத்த நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் பயன்படுத்தும் அட்டைத்தாரர்கள், இரண்டு சிலிண்டர் பயன்படுத்தும் அட்டைத்தாரர்கள் மற்றும் சிலிண்டர் இல்லாமல் இருக்கும் அட்டைத்தாரர்கள்  போன்ற அடிப்படையில் ரேஷன் சலுகைகள் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

 

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வசதிற்கேற்பவும் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு சலுகைகள் முதல் திட்டங்கள் தமிழ் நாடு அரசு விரிவாகச் செயல்படுத்தி கவனம் செலுத்தி வருகிறது.

ரேஷன் பொருட்கள் என்பது பாமர மக்கள், நடுத்தர மக்கள் போன்றோருக்குக் குறைந்த விலையில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

 

இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மலிவான விலையில் வழங்கப்படுவதால் தமிழ் நாடு மக்கள் இதில் அதிகமாக பயன்பெறுகின்றனர்.  கோடிக்கணக்கான மக்களின் குளறுபடிகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கைரேகை வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பல சிரமங்கள் நிலவிவருகிறது. 

 

ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப நபர்கள் மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் சலுகைகள் பெறமுடியும். இந்த திட்டத்தை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தற்போது அமலிருந்து வருகிறது. 

கைரேகை பதிவு என்பது ரேஷன் கடைகளில் கட்டயாமான ஒன்று. இந்த நேரத்தில் மழையால் மக்கள் ஏற்கனவே கவலையில் இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களை அழைத்து கைரேகை வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று அதிரடியாக உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கைரேகை இல்லாவிட்டாலும் அல்லது கைரேகை வைப்பத்தில் தாமதம் ஏற்பட்டாலும் அதனை ஈடுசெய்யும் விதமாக குடும்ப அட்டைத்தாரர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று எடுத்துக்கொள்ள உணவுத்துறை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

 

பெய்த ஃபெங்கல் புயலால் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அதிகமாக பாதிப்படைந்தனர். முக்கியமாக குறிப்பிட்ட இந்த மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்தனர். கடலூர்ம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கெடுத்தோடியது. 

ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பில் ஒப்புதலில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விரல்ரேகை பதிவாகவில்லை என்றாலும் ரேஷன் கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் நீடிக்கும் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நேரத்தில் பொருட்கள் சிரமம் இல்லாமல் வாங்க ஒரு நற்செய்தியாக அமைந்தது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link