அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்
கோலிவுட்டின் டாப் ஸ்டார்களுள் ஒருவராக வலம் வரும் அஜித் குமார். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், டாப் நடிகர்களுள் ஒருவராவார்.
அஜித்தின் திரை வாழ்க்கை அவருக்கு எவ்வளவு பிடித்திருக்கிறதோ, அதை விட அவருக்கு அவருடையை குடும்பத்தை மிகவும் பிடிக்கும். எந்த விஷயத்திற்காகவும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தயங்காதவர் இவர்.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி இருக்கின்றன. இவை இந்த ஆண்டின் முதல் சில மாதங்களிலேயே வெளியாகிவிடும்.
அஜித்திற்கு சினிமாவை தாண்டி பிடித்த விஷயம், பைக் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது. இதற்காக பயங்கரமாக வர் தயாராகி வருகிறார்.
அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த அவர் இப்போது எலும்பும் தோளுமாக மாறி அடையாளமே தெரியாதபடி ஆகி விட்டார்.
இவரை பார்த்த பலர், அஜித்துக்கு என்ன ஆசோ ஏதாச்சோ என புலம்பி வருகின்றனர். இவர், கார் ரேஸுக்காக இப்படி எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.