2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைப்பெற்றது.
கோவாவில் நடைப்பெற்ற திருமண நிகழ்வில், கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கீர்த்தியின் திருமணம், முதலில் தமிழ் இந்து முறைப்படி நடந்ததை தொடர்ந்து, இன்னொரு முறை கிறிஸ்தவ முறைப்படி நடந்திருக்கிறது.
படங்களில் காட்டுவது போல, ஒரு மேடையில் ஆண்டனியும் கீர்த்தியும் திருமண சத்தியங்களை பரிமாறிக்கொண்டு முத்தம் கொடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியிருக்கிறது.
முன்னதாக, தமிழ் முறைப்படி, தந்தையின் மடி மீது அமர்ந்து ஆண்டனியின் கையால் தாலி கட்டிக்கொண்டார் கீர்த்தி. அப்போது அவர் எமோஷனல் ஆன போட்டோக்கள் வெளியாகியிருக்கிறது.
கீர்த்திக்கு இன்னொரு முறை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் ஆகியிருப்பதை தொடர்ந்து, பலரும் இவருக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.