நஸ்ரியா வீட்டில் விசேஷம்..மகிழ்ச்சியாக இருக்கும் பகத் பாசில்! என்ன விஷயம்?
நடிகை நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆன போது, இவரது வயது 20. திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு விலகிய இவர், சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நஸ்ரியா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘சூக்ஷும தர்ஷினி’ படம், நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அவர் இன்னும் சில படங்களின் கதைகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
நஸ்ரியாவிற்கு, நவீன் என்ற சகோதரர் இருக்கிறார். இவருக்கு, ஒப்பனையாளர் ஃபிஸா என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை, நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் தன் சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் எடுத்திருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்களில், நஸ்ரியாவுடன் இருக்கும் பகத் பாசிலும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக தெரிகிறார். இதனால், இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.