Ramya Krishnan: ரம்யா கிருஷ்ணனின் மகனா இது? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாரே! வைரல் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.
ஆரம்பத்தில் படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், அடுத்து ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தார்.
இவருக்கு பெரும் புகழை தேடித்தந்த படம், படையப்பா. இந்த படத்தில் நீலாம்பரி எனும் வில்லி கதாப்பாத்திரமாக வந்து கலக்கினார். இந்த பாத்திரத்தை தட்டித்தூக்கும் அளவிற்கு வேறு எந்த கேரக்டரும் வரவில்லை.
ரம்யா கிருஷ்ணன், கிருஷ்ணா வம்சி என்ற இயக்குநரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2005ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர், ரித்விக் வம்சி.
ரித்விக்கிற்கு, தற்போது 19வயதாகிறது. தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை அவ்வப்போது ரம்யா கிருஷ்ணன் பதிவிடுவார்.
சமீபத்தில், தன் மகனுடன் எடுத்த வீடியோ ஒன்றை ரம்யா கிருஷ்ணன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ரம்யா கிருஷ்ணன்னின் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.