லியோ படத்தின் ‘ஸ்பெஷல்’ புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!
)
லியோ திரைப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றை நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
)
லியோ படம், வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இதன் டிரைலர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
)
கடைசியாக ‘குருவி’ படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு, லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.
லியோ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘அன்பெனும்’ பாடல் சமீபத்தில் வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியான இப்பாடலில், விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் சில புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
அன்பெனும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இப்பாடல் பல மில்லியன் வியூஸ்களை எட்டியது.
த்ரிஷா, லியோ படத்தின் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.