நடிகர் விஜய் பகிர்ந்த ‘லியோ’ வெற்றி விழா புகைப்படங்கள்!

Sun, 05 Nov 2023-8:35 am,

கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியான படம், லியோ. லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் இரண்டாவது முறையாக கைக்கோர்த்த படம் இது. 

லியோ படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இப்படத்தின் வெற்றி விழா கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. 

‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை கூறி ரசிகர்களை மகிழ்விக்கும் விஜய், இந்த படத்தின் வெற்றி விழாவிலும் அதையே செய்தார். 

லியோ வெற்றி விழாவில் விஜய், ரஜினியை மறைமுகமாக தாக்கியதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்தது. 

லியோ வெற்றி விழா, பிரபல தனியார் தொலைக்காட்சியில் இன்று (ஞாயிறு நவ., 5) மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது. 

விஜய், இவ்விழாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link