2023ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்!

Fri, 22 Dec 2023-11:07 am,

லியோ

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் லியோ முதல் இடத்தில் உள்ளது.  விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் நடித்து இருந்தனர். உலகம் முழுவதும் ரூ.650 கோடி வசூல் செய்து இருந்தது.  

 

ஜெயிலர்

ரஜினியின் ஜெயிலர் படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் நடித்து இருந்தனர்.  உலகம் முழுவதும் ஜெயிலர் ரூ. 615 கோடி வசூல் செய்துள்ளது.

 

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2 படம் 3வது இடத்தில் உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த வரலாற்று காவியத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு நடித்து இருந்தனர்.  இந்த படம் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடி வசூல் செய்துள்ளது.

 

வாரிசு

பொங்கல் தினத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படம் 4வது இடத்தில் உள்ளது. வம்சி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம் நடித்து இருந்தனர்.  இந்த படம் உலகம் முழுவதும் ரூ.300க்கும் மேல் வசூல் செய்துள்ளது.  

 

துணிவு

5வது இடத்தில் அஜித்தின் துணிவு படம் உள்ளது.  வினோத் இயக்கி இருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி, தர்சன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.  இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link