தோழனாய், சாரதியாய், வழிகாட்டியாய், காதலனாய்…. யாதுமாகி நின்றான் கண்ணன்!!

Tue, 11 Aug 2020-1:25 pm,

தேவகி, யசோதை என இரு தாய்களின் அன்பின் மழையில் நனைந்த கண்ணன் இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை வடிவில் உலவிக் கொண்டுதான் இருக்கிறான். ஒவ்வொரு தாயும் தங்கள் மகனை கண்ணா என்றும் மகளை கண்ணம்மா என்றும் அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

தான் ஒரு மன்னனாக இருந்த போதும் தன்னைக் காண வந்த தன் இள வயது நண்பன் குசேலனைக் கண்ட கண்ணன் உணர்ச்சிவசப் பட்டு, அவரைத் தழுவிக் கொண்ட காட்சி, சிறந்த நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டல்லவா!!

தன் மக்கள் கலங்குவதைக் கண்ணனால் காண முடியாது. பிருந்தாவனத்தில் மழை கட்டுக்கடங்காமல் பெய்த போது, கோவர்தன மலையையே தன் சுண்டு விரலால் குடையாகப் பிடித்து மக்களைக் காத்த கண்ணனின் கருணையை என்னவென்று சொல்ல?

திரௌபதியை துச்சாதனன் சபையில் துயிருத்த போது, அவள் ‘கண்ணா..’ என அழைக்க, தன் சகோதரியின் குரல் கேட்டு அவள் மானம் காக்க சேலை மழையைப் பொழிந்தார் கண்ணன்.

பாண்டவர்களின் வழிகாட்டியாய் அவர்களுடனேயே இருந்து, அவர்களுக்கு ஆதரவளித்து, துவண்டு போகாமல் துணைக்கு நின்றார் கண்ணன்.

மகாபாரதப் போரில் எதிரே தன் உறவினர்களும் குரு மார்களும் நிற்பது கண்டு செய்வதறியாமல் நின்ற அர்ஜுனனுக்கு தேரோட்டியாய் உடனிருந்து போருக்கான தர்மங்களைப் புரிய வைத்து அவனை வெற்றி பெற வைத்தார் கிருஷ்ணர்.

கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத மனமும் இந்த உலகில் இருக்க முடியுமோ? அவன் நம் மீது காட்டும் அன்பிற்கும் நாம் அவன் மீது காட்டும் அன்பிற்கும் எல்லை ஏது?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link