காலாவதியான பாலிஸியை புதுப்பிக்க அரிய வாய்ப்பு.. 30% தள்ளுபடி பெறலாம்..!!!

Sat, 09 Jan 2021-5:12 pm,

பாலிசி எடுத்த பிறகு பல முறை மக்கள் பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்த மறந்து விடுகிறார்கள். சில சமயங்களில் நிதி நெருக்கடி காரணமாக பாலிஸியை செலுத்த முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், பிரீமியம் செலுத்தாததாக் பாலிஸி காலாவதியாகிறது. நீங்கள் பாலிசியைத் தொடர விரும்பினால், பாலிசியின் பிரீமியத்தை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.

காலவதியான பாலிசியை மீண்டும் தொடங்குவதால், இழப்பை தவிர்க்கலாம். காப்பீடிற்கான பிரீமியம் வயது அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. காலவதியான பாலிஸியை புதுப்பிக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பாலிசிதாரர்களுக்கு பாலிஸியை தாமதமாக கட்டுவதற்கான விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது ₹2,000 தள்ளுபடி கிடைக்கும் திட்டத்தை LIC கொண்டு வந்துள்ளது.   

இருப்பினும், பாலிஸியை புதுப்பிக்க, கோவிட் -19 தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஏனென்றால் இது தொடர்பான வழிகாட்டுதலை அரசு அறிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளாக பிரீமியம் செலுத்தாமல், காலாவதியான பாலிசியை புதுபிக்க நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சியின் சாடிலைட் அலுவலகங்களை அணுகலாம். இதற்காக, மக்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் கூட செய்ய வேண்டியதில்லை. இந்த காலகட்டத்தில், காலாவதியான பாலிஸியை சில நிபந்தனைகளுடன் புதுப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பை மார்ச் 6 வரை தொடர எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது. முன்னதாக, எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்காக ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 9, 2020 வரை இதேபோன்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link