60+ வயதிலும் பிட் ஆக இருக்க... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை..!!
காலையில், சில குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றத்தை துரிதமடைந்து, உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கப்படும். உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க காலையில் எந்தெந்த உணவு பொருட்கள் அல்லது பானங்களுடன் உங்கள் நாளை ஆரம்பிக்க வேண்டும் என்பதை விரிவாக அறிந்துகொள்ளலாம்
வெதுவெதுப்பான நீர்: காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது 1-2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தான். வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் செரிமானம் மேம்படும். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. இதைத் தவிர எண்ணற்ற அரோக்கிய நலன்கள் கொண்டது.
டீடாக்ஸ் பானம்: வெதுவெதுப்பான நீர் குடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்க்கலாம். இது உடலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த பானமாக இருக்கும். மேலும், இதனால் உடல் எடை குறைவதோடு, நோய் எதிர்ப்பு சக்திய்யும் அதிகரிக்கும்
ஹெர்பல் டீ: காலையில் எழுந்தவுடன் டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால், பால் கலந்த டீ, காபி குடிப்பதை நிறுத்துங்கள். மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
முளை கட்டிய தானியங்கள்: காலையில் புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை எடுக்க வேண்டும். முளை கட்டிய ட்தானியங்கள் இதற்கான சிறந்த தேர்வு. ஆற்றல், புரதம் மற்றும் வைட்டமின்களை வழங்கும். மேக்லும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும், மேலும் இது ஒரு சூப்பர் ஆரோக்கியமான உணவாகும்.
பேரிச்சம்பழம்: உங்கள் காலை உணவில் ஊறவைத்த 2 பேரிச்சம்பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் வெறும் வயிற்றில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் கிடைக்கிறது. செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
பப்பாளி: காலை உணவில் சில பழங்களை சேர்க்க விரும்பினால், அதற்கு பப்பாளி சிறந்த தேர்வு. பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்திற்கு உதவுகிறது. பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது, இது புரதங்களை உடைக்க உதவுகிறது. பப்பாளி பழத்தை காலையில் சாப்பிட்டால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.