பொங்கலுக்கு இந்த 3 படங்கள் மட்டும் தான் ரிலீஸ்! தள்ளிபோகும் படங்கள்!
பொதுவாக பண்டிகை தினத்தில் பெரிய ஹீரோ படங்கள் வெளியாகும். மேலும் நிறைய படங்கள் அந்த தினத்தில் வெளியாகும்.
வரும் 2024 பொங்கல் அன்று கிட்டத்தட்ட 5,6 படங்கள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் பின்பு ஒவ்வொரு படங்களாக தேதிகளை மாற்றின.
ஜனவரி 26ம் தேதி வெளியாக இருந்த தங்களான் படம் தற்போது மார்ச் மாதத்திற்கு தள்ளி போகி உள்ளது. மேலும் அரண்மனை 4 பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளி போகிறது.
தற்போது வரை அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் மட்டுமே பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளன.
இந்த வரிசையில் மேலும் சில படங்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது.