கிசுகிசு: சம்பளத்தை தாறுமாற உயர்த்திய லோகேஷ்: ரஜினி படத்துக்கு வேற இயக்குநரை தேடும் சன்பிக்சர்ஸ்
விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு இப்போது விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு, பாலிவுட் பிரபலங்களை இயக்கும் வாய்ப்பு அவரை தேடிச் சென்று கொண்டிருக்கிறது.
மார்க்கெட்டில் செம டிமாண்ட் இருப்பதை அறிந்து கொண்ட அவர் சம்பளத்தை 40 கோடிக்கு உயர்த்திவிட்டாராம். மேலும், லாபத்திலும் பர்சென்ட்டேஜ் கேட்கிறாராம்.
இதனைக் கேட்ட சன்பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினியை வைத்து தயாரிக்க இருந்த படத்துக்கு இப்போது புதிய இயக்குநரை தேட ஆரம்பித்துவிட்டதாம்.
தெலுங்கில் இதை விட அதிகம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பதால், சம்பளத்தை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என சொல்லிவிட்டாராம்.