லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்? அவரே சொன்ன அப்டேட்!
ஒரு தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட லோகேஷிடம் மாணவர்கள் லியோ மற்றும் கைதி 2 படம் பற்றிய தங்கள் கேள்விகளால் அவரை திகைக்க வைத்தனர்.
மறுபுறம், 'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. 'லியோ' படத்திற்குப் பிறகு, 'கைதி 2'க்கு முன், இந்த திட்டம் அவரது அடுத்த முயற்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தகவலை லோகேஷ் உறுதிப்படுத்தினார். கைதி 2 எப்போது தொடங்கும் என்று ஒரு ரசிகர் கேட்டார், அதற்கு லோகி, "நான் அடுத்த படம் ஒன்று இயக்க உள்ளேன். அதன் பிறகு கைதி 2 தொடங்கும்" என்று பதிலளித்தார்.
லோகேஷ் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கப் போகிறீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு, "தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வரும். அதை இப்போது வெளியிட முடியாது" என்று பதிலளித்தார்.
'லியோ' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் லோகேஷ் கனகராஜ் சொன்ன அதே பதில்தான் இப்போதும் கூறி உள்ளார். ரஜினியுடன் லோகேஷ் இணையும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.