புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ்! இயக்குனர் யார் தெரியுமா?
)
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார்.
)
கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து தற்போது ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார்.
)
தற்போது G Squad என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
முதலில் தனது நண்பர்கள் மற்றும் உதவி இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்க உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி லோகேஷ் கனகராஜ் தனது நண்பர் ரத்தினகுமாரை வைத்து முதல் படம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.