சிம்மத்திற்கு மாறிய புதன்: கோடீஸ்வர யோகத்தை மூட்டையாய் குவிக்கப்போகும் 3 ராசிக்காரர்கள்!

Fri, 06 Dec 2024-5:28 pm,

சரியாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி 4 தேதி மதியம் 12:11 மணி அளவில் புதன் பகவான் தனுஷ் ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த இடம்பெயர்தல் பின்வரும் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித்தரப்போவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

 

மகர ராசிக்காரர்கள் :இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அதிகம் கவனத்தில் இருப்பார்கள். பணி மீது மிகுந்த ஆர்வம் அதிகரிக்கும். மகர ராசிக்காரர்கள் திருமண உறவிலிருந்து மனக்கசப்புகள் நீங்கி இன்பம் காணும் நல்ல நேரம் உங்களை தேடி வரபோகிறது.

 

மகர ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரம் இது, எனவே மாணவர்கள் உங்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் புத்தாண்டில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வருமானத்தில் உயர்வு காண்பீர்கள், துலாம் ராசிக்காரர்கள் ஏழ்மையிலிருந்து விரைவில் நல்ல சுகம் காண்பீர்கள், சமூகத்தில் உங்கள் மீது மிகுந்த மரியாதை கூடும். இந்த ராசிக்காரர்கள் ஏதேனும் நீதிமன்ற நிலுவையில் மனக்கசப்பிலிருந்தால் அதில் நல்ல தீர்வு கிடைக்கும்.

உடலில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குறிப்பாகச் சளி, மூட்டுவலி தொடர்பான பிரச்சனையிலிருந்து குணமடைவார்கள். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது. நண்பர்களுடன் அதிக நெருக்கத்தில் இருப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.

 

மிதுன ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நல்ல செல்வச் செழிப்புடன் சுகமாக வாழ்வார்கள். புதிய ஆண்டில் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கி இன்பம் பெருகப் புதன் பகவான் உங்களுக்கு அருள்புரிகிறார்.

மிதுன ராசிக்காரர்களாக இருப்பவர்கள் உங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சரியாகும். மேலும் இந்த ராசிக்காரர்கள் சிறிது கோபம் தணிக்க வேண்டும்.  கோபத்தைத் தணித்தால் உறவு வலுப்பெறும். பணிகளில் ஏதேனும் மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து மன அமைதிக் காண்பீர்கள். 

மிதுன ராசிக்காரரின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறப்போகிறது. குறிப்பாகக் கடை வியாபாரிகள் ஏதேனும் கடை திறப்பு செய்ய முயன்றால் அதில் நல்ல வரவு கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link