Love affairs: அந்நாள் பாலிவுட் நடிகைகளுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் கிசுகிசுக்கள்
ரேகா என்றென்றும் மிகவும் பிரபலமான நடிகை. அவரை இன்றும் பழம்பெரும் நடிகை என்று சொல்லிவிட முடியாது. ஒருவர், இம்ரான் கான் மும்பைக்கு வரும்போதெல்லாம், அவரும் ரேகாவும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர் என்று கூறப்படுகிறது
பாலிவுட்டின் பிரபல நடிகை ஜீனத் அமனுக்கும் இம்ரான் கானுக்கும் காதல் என்று வதந்தி பரவியது. 1979 நவம்பரில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு விஜயம் செய்தது, இம்ரான் கானை 'பிளேபாய்' என்று அழைத்தார்கள். அந்த ஆண்டு இம்ரான் கான் தனது பிறந்தநாளின்போது பெங்களூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருந்தார். அப்போது, டிரஸ்ஸிங் அறையில் இம்ரான் தனது 27 வது பிறந்தநாளை தனது அணியினருடன் கொண்டாடினார், ஆனால் சில இந்திய பத்திரிக்கைகளில் இம்ரான் தனது 27 வது பிறந்த நாளை பாலிவுட் நடிகை ஜீனத் அமனுடன் கொண்டாடியதாக கூறின. கிரிக்கெட் மைதானத்தில் கேக் வெட்டிய பிறகு, இம்ரான் ஜீனத்தை தனியாக சந்தித்தாரோ என்னவோ? ஜீனத் அமனோ, இம்ரான் கானோ தங்களுக்கு இடையிலான உறவு பற்றி வெளிப்படையாக பேசவில்லை.
பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மியுடன் இம்ரானின் பெயரை இணைத்து வதந்திகள் உலா வந்தன. ஆனால் இருவரும் தங்கள் உறவு பற்றி மறுத்தும் பேசவில்லை, ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இம்ரான் கானுக்கும் பெங்காலி நடிகை மூன் மூன் செனுக்கும் இடையிலான நெருக்கம் அந்த நேரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மூன் மூன் செனை இம்ரான் விரும்புவதாக கூறப்பட்டது.
பாலிவுட் நடிகைகளின் விருப்பமான கிரிக்கெட் ஹீரோ இம்ரான் கான் என்று கூறப்பட்ட காலம் அது. அவரது காதல் கதைகள் இன்றும் பிரபலமாக உள்ளன.