`லவ் டுடே` நாயகி இவானவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தான் நடிகை இவானா.
இவானா என்கிற பெயரை விட நிகிதா என்கிற பெயர் தான் இவருக்கு பெருமை சேர்க்கிறது என்றே கூறலாம், அந்தளவுக்கு நிகிதா எனும் பெயர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இவரை 'நிகிதா' என்றும் 'இவானா' என்றும் அடையாளம் காணும் பல ரசிகர்களுக்கு இவரின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பது பெரிதும் தெரிந்திருக்காது.
அலீனா ஷாஜியாக பிறந்து, இவானாவாக திரையுலகில் பயணத்தை தொடங்கி, நிகிதாவாக ஜொலித்து கொண்டிருக்கும் இவர் இன்னும் என்னென்ன கதாபாத்திரங்களில் ரசிகர்களின் இதயங்களை களவாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.